மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
உச்சிகருப்பனுக்கு சிறப்பு பூஜை
சிங்கம்புணரி அருகே வேங்கைப்பட்டி மதுராபுரிக்குட்பட்ட தொட்டிய காத்தன் வயலில் மஞ்சு விரட்டு நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் அங்குள்ள உச்சிகருப்பன் சுவாமிக்கு படையல் போட்டு சிறப்பு பூஜை நடத்தப்படும். கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்துப்போன நிலையில் விவசாயம் செழிக்கவில்லை. வயல்வெளிகள் காய்ந்து கிடந்தன. இதனால் தைமாதத்தில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த மழையால் விவசாயம் இப்பகுதியில் செழித்தன. வயல்வெளிகளில் நெற்கதிர்கள் அறுவடை ஆகாமல் இருந்த காரணத்தால் கடந்த ஆண்டு தொடங்கி தை படையலை மாசி படையலாக மாற்றி விழா கொண்டாடப்பட்டது.
மஞ்சுவிரட்டு
முன்னதாக உச்சி கருப்பர் சுவாமிக்கு மாசிமாத படையலை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூைஜ செய்து வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து மஞ்சுவிரட்டு தொழுவத்தில் கோவில் காளைக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக தொழுவத்தில் இருந்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.
சிங்கம்புணரி மற்றும் சுற்றி உள்ள பிரான்மலை, பொன்னமராவதி, நத்தம், கொட்டாம்பட்டி, மேலூர், திருப்பத்தூர் போன்ற பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 300 காளை அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை பிடிக்க காளையர்கள் போட்டி போட்டு கொண்டு பிடித்தனர். ஒரு சில காளைகள் பிடிபட்டன. அதை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பிடிபடாத காளை உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story