ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 16 Feb 2022 12:13 AM IST (Updated: 16 Feb 2022 12:13 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வளர்ச்சி பணிகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட சின்னக்கல்லு பள்ளி ஊராட்சியில் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம்  மதிப்பீட்டில் வீடுகள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

 மண்டலவடி ஊராட்சியில் ரூ.5.67 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை, பொன்னேரி ஊராட்சியில் ரூ.6½ லட்சம் மதிப்பில் கால்வாய் தூர்வாரும் பணி, ஏலகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.2.84 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி சுற்றுச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திரியாலம் ஊராட்சியில் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பில் பண்ணை குட்டை அமைத்தல், கட்டேரி ஊராட்சியில் ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி என ரூ.41 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

கலெக்டர் ஆய்வு

இந்த பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது 100 நாள் வேலை பணியாளர்களிடம் உங்களுக்கு பணிகள் மற்றும் ஊதியம் சரியாக வழங்கப்படுகிறதா எனவும், குறைகள் ஏதேனும் உள்ளதா என்றும் கலெக்டர் கேட்டறிந்தார். 

அப்போது பணியாளர்கள், கலெக்டரிடம் பல்வேறு கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என கலெக்டர் கூறினார். 

தொடர்ந்து சாலைகளின் அகலம், நீளம் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்து, கட்டிடங்களின் தரம், அளவுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், விநாயகம், உதவி பொறியாளர் பூபாலன், பணி மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர்கள் சின்னத்தம்பி, மகேஷ், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story