நெல் கொள்முதல் நிலையங்களில் உண்மையான விவசாயிகள் பயன்பெற வேண்டும். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் அறிவுறுத்தல்


நெல் கொள்முதல் நிலையங்களில் உண்மையான விவசாயிகள் பயன்பெற வேண்டும். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 16 Feb 2022 12:14 AM IST (Updated: 16 Feb 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

நெல் கொள்முதல் நிலையங்களில் உண்மையான விவசாயிகள் பயன்பெறவேண்டும் என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கூறினார்.

ராணிப்பேட்டை

நெல் கொள்முதல் நிலையங்களில் உண்மையான விவசாயிகள் பயன்பெறவேண்டும் என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கூறினார்.

பயிற்சி

ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து, நெல்கொள்முதல் செய்வதற்கு தகுதியுள்ள விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்திட, ராணிப்பேட்டை கோட்டத்திற்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இணைய வழியாக பதிவு செய்வது குறித்த பயிற்சி நடந்தது. பயிற்சியை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உண்மையான விவசாயிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட, அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும், விவசாயிகளின் தற்போதைய அறுவடை விவரங்களை ஆய்வு செய்து, இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும். முந்தைய பருவத்தில் பயிர் செய்த விவரத்தினை தற்போது பதிவு செய்து அடங்கல் வழங்கிடக் கூடாது. நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் உண்மையான விவசாயிகள் மட்டும்தான் பயன்பெற வேண்டும். விவசாயிகள் பெயரில் வியாபாரிகள் பயன்பெறக் கூடாது. 

மழை வெள்ள பாதிப்பால் இழப்பீடு பெற்ற நெல்லை கொள்முதல் செய்யக் கூடாது. இதனை கிராம நிர்வாக அலுவலர்கள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அறுவடை செய்யப்பட உள்ள நெல்லுக்கு நேரடியாக கள ஆய்வு செய்து தகுதியான விவசாயிகளுக்கு அடங்கல் ஆவணங்களை வழங்கிட, கிராம நிர்வாக அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
நடவடிக்கை

கிராம நிர்வாக அலுவலர்கள் அளிக்கும் ஆவணங்களும், எங்களிடம் உள்ள முந்தைய ஆவணங்களும் ஒப்பிட்டு பார்த்து சரிபார்க்கப்படும். நீங்கள் இணையதளத்தில் கொடுக்கும் ஆவணங்கள் வந்தவுடன், மண்டல அலுவலர்கள் அதனை கள ஆய்வு செய்து சரி பார்ப்பார்கள். அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும், விவசாயிகளின் உண்மையான ஆவணங்களை மட்டும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 

பதிவு செய்த ஆவணங்களில் தவறுகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் பூங்கொடி, வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராஜா, வேளாண்மை துணை இயக்குனர் விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story