நெமிலி அருகேகுடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


நெமிலி அருகேகுடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Feb 2022 12:14 AM IST (Updated: 16 Feb 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

நெமிலி அருகேகுடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுணமல்லி  ஊராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்காக ஏரியில் 2 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஏரி முழுமையாக நிரப்பி உள்ளதால் 2 ஆழ்துளைகிணறுகள் மூலமும் தண்ணீர் ரினியோகம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒருசில பகுதிகளில்  கடந்த ஒரு வாரமாக குடிநீர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் நெமிலி ஒன்றியக் குழு தலைவர் வடிவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி உடனடியாக செய்து தருவதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து மறியலை கைவிட்டனர். மேலும் புதுமல்லி பகுதியில் இருந்து சிறுணமல்லி பகுதிக்கு பைப் லைன் அமைக்கும் பணிகள் பொக்லைன் எந்திரம் மூலம் தொடங்கியது.

Next Story