வீடு,வீடாக பூத் சிலிப் வினியோகம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடுவதற்காக வீடு, வீடாக வாக்காளர்களிடம் பூத்சிலிப் வினிேயாகிக்கப்படுகிறது.
சிவகங்கை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடுவதற்காக வீடு, வீடாக வாக்காளர்களிடம் பூத்சிலிப் வினிேயாகிக்கப்படுகிறது.
பூத் சிலிப் வினியோகம்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் உள்ள 285 வார்டுகளுக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற் கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி அன்று ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் மூலம் வீடு,வீடாக சென்று பூத் சிலிப்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் நாளன்று வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடிகளில் இந்த சீட்டை காட்டி வாக்களிக்கலாம் அல்லது தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.
நாளை மாலை பிரசாரம் நிறைவு
மேலும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரசாரம் நாளை (வியாழக்கிழமை) அன்று மாலை 6 மணிக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story