அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்


அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 16 Feb 2022 12:24 AM IST (Updated: 16 Feb 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

போலி சான்றிதழ் கொடுத்து பேரூராட்சியில் மனுதாக்கல் செய்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது போலீசார் புகார் செய்யப்பட்டது.

வாணியம்பாடி

உதயேந்திரம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் குருசாமி வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த தேர்தலில் உதயேந்திரம் பேரூராட்சி வார்டு எண் 9 ஆதிதிராவிடர் பொது வார்டாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
இந்த வார்டில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கபில்தேவ் என்பவரிடம் 4.2.2022 அன்று அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐ.தமிழரசன் என்பவர் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர் ஆகிய இவர், தான் இந்து ஆதிதிராவிடர் என வேட்புமனு தாக்கலின் போது பொய்யான சான்று சமர்ப்பித்துள்ளார்.

இவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தமிழரசன் மீது தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறி உள்ளார். 

புகாரின் பேரில் வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story