போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
திருப்பத்தூரில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
திருப்பத்தூர்
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் தீவிரமடைந்து உள்ளது.
திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் 162 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் கொடி அணிவகுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் தலைமையில் நடந்தது.
திருப்பத்தூர் டவுன் கோட்டை தெருவில் தொடங்கி அண்ணா நகர், கவுதம்பேட்டை, காந்திநகர், புதுப்பேட்டை ரோடு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டு அணிவகுப்பில் சென்றனர்.
Related Tags :
Next Story