விவசாயிகள் சாலை மறியல்
விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
மணமேல்குடி
மணமேல்குடியை அடுத்த சிங்கவனத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து குறைந்த அளவு நெல்மணிகளே கொள்முதல் செய்யப்படுகிறது. சிங்கவனம், காரக்கோட்டை, தினையாகுடி, நிலையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் நெல் அறுவடை செய்யப்படுகிறது.
ஆகவே, இந்த நிலையத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரியும், இந்த கொள்முதல் நிலையத்தை மூடக்கூடாது என்று கூறியும் விவசாயிகள் ஒருங்கிணைந்து சிங்கவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், மணமேல்குடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உங்கள் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன்பேரில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story