கோவில் இடத்தில் செயல்பட்ட 3 கடைகளுக்கு ‘சீல்’
மயிலாடுதுறையில் வாடகை செலுத்தாததால் கோவில் இடத்தில் செயல்பட்ட 3 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் வாடகை செலுத்தாததால் கோவில் இடத்தில் செயல்பட்ட 3 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’
மயிலாடுதுறையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமிநாராயணபெருமாள் கோவிலுக்கு சொந்தமாக இடத்தில் ெரயிலடி பகுதியில் ஒரு வணிக வளாகம் உள்ளது.
இதில் உள்ள 3 கடைகளுக்கு வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்திருந்திருந்தனர். இதனையடுத்து அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன் தலைமையில் செயல் அலுவலர்கள் அசோக்குமார், ஞானசுந்தரம், ஆய்வாளர்கள் உத்ராபதி, கண்ணதாசன் ஆகியோர் முன்னிலையில் வாடகை செலுத்தாத 3 கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான வணிக வளாகங்களுக்கு வாடகை செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story