மாயமான சிறுவன், கிணற்றில் பிணமாக மீட்பு
சாத்தூர் அருகே மாயமான சிறுவன், மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டான்.
தாயில்பட்டி,
சாத்தூர் அருகே மாயமான சிறுவன், மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டான்.
சிறுவன் மாயம்
சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை வடக்கு தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 40). இவருடைய மனைவி காளீஸ்வாி. இவர்களுடைய மகன்கள் பரந்தாமன் (9), பாண்டீஸ்வரன் (7). இந்தநிலையில் காளீஸ்வாி இறந்து விட்டதால் கோபால் 2-வது திருமணம் செய்து கொண்டார்.
2 குழந்தைகளையும் கோபால் தான் பராமரித்து வந்தார். குழந்தைகளை பராமரிக்க சிரமமாக இருப்பதாகவும், ஆதலால் பரந்தாமனை மட்டும் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் விடபோவதாக கூறியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் பரந்தாமன் விளையாட செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றான். நீண்ட நேரமாகியும் அவன் வீட்டிற்கு வரவில்லை.
கிணற்றில் பிணம்
இதுகுறித்து கோபால் அளித்த புகாரின் பேரில் ஏழாயிரம் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் வழக்கு பதிவு செய்து சிறுவனை பல்ேவறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் தனியார்பள்ளி பின்புறம் உள்ள பாழடைந்த கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாகவும், சிறுவனின் உடல் தண்ணீரில் மிதப்பதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏழாயிரம் பண்ணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த கிணற்றை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தையா தலைமையில் வீரர்கள் கிணற்றில் இறங்கி மிதந்து கொண்டிருந்த சிறுவனின் உடலை மேலே கொண்டு வந்தனர்.
போலீசார் விசாரணை
அப்போது அது மாயமான பரந்தமானின் உடல் என்பது தெரியவந்தது. பின்னர் சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விருதுநகரில் இருந்து கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டனா? அல்லது கொலை செய்யப்பட்டனா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story