தனியார் நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகை
நெல்லையில் தனியார் நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு எற்பட்டது.
நெல்லை:
நெல்லையில் தனியார் நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை
நெல்லை மேலப்பாளையத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனத்தை நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரசிதா, சப்-இன்ஸ்பெக்டர் சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகையிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதிகாரிகள் உறுதி
அப்போது அவர்கள் கூறுகையில், ‘இந்த நிதி நிறுவனத்தில் தினமும் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.1,000 என்ற வகையில் பணம் ெசலுத்தினால் ஒரு ஆண்டு முடிந்த பின்னர் அசல் தொகையுடன் கூடுதல் வட்டி சேர்த்து வழங்கப்படும் என்று கூறினர்.
இதனால் 100-க்கும் மேற்பட்டவர்கள் அந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களாக சேர்ந்தனர். இந்த நிலையில் அந்த திட்டம் முதிர்வடைந்த வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் கடந்த 3 மாதங்களாக இழுத்தடித்து வருகின்றனர்’ என்று தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த நிதி நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளிடம் செல்போன் மூலம் பேசினர். அப்போது அவர்கள், குறிப்பிட்ட சில நாட்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து வாடிக்கையாளர்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story