அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தவர்களுக்கு அபராதம்
தஞ்சை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தவர்களுக்கு அபராதம் விதித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தஞ்சாவூர்:-
தஞ்சை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தவர்களுக்கு அபராதம் விதித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அனுமதியின்றி விளம்பர பதாகை
தஞ்சை மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் தஞ்சை தாலுகாவில் 3 மண்டபங்களில் விதிமுறைகளை மீறி விளம்பர பதாகைகள் (பிளக்ஸ் பேனர்) வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விளம்பர பதாகையை அச்சடித்த நிறுவன உரிமையாளர்கள் மீது போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதிப்பு
மேலும், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகாவில் 8 விளம்பர பதாகைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விளம்பர பதாகையை பிரிண்ட் செய்த நிறுவனத்தின் மீது சட்டப்படி வழக்குபதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று விளம்பர பதாகைகள் வைக்குமாறு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story