வாகன சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல்
ராஜபாளையத்தில் வாகன சோதனையின் ேபாது ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் தனி வட்டாட்சியர் ராமநாதன் தலைமையிலான பறக்கும் படையினர் புதிய பஸ்நிலையம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரை ஓட்டி வந்தவர் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1½ லட்சம் இருந்தது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் நிலம் வாங்குவதற்காக வங்கியில் இருந்து எடுத்த ரூ.5 லட்சத்தில், ரூ.3½ லட்சம் போக மீதமுள்ள பணத்தை கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார். ஆனால் பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. எனவே அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் தேர்தல் நடத்தும் அலுவலர் சுந்தராம்பாளிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story