மாரியம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை
திருச்சுழி மாரியம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
காரியாபட்டி,
திருச்சுழியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தினமும் சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் காலையும், இரவும் வெள்ளி ரிஷப வாகனம், மயில் வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இந்த கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மாரியம்மன் விளையாட்டு மன்றம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது. இதில் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story