வாக்குச்சாவடிகளில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும்
வாக்குச்சாவடிகளில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று மண்டல அலுவலர்களுக்கு கலெக்டர் கார்மேகம் அறிவுரை வழங்கினார்.
சேலம்:-
வாக்குச்சாவடிகளில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று மண்டல அலுவலர்களுக்கு கலெக்டர் கார்மேகம் அறிவுரை வழங்கினார்.
மண்டல அலுவலர்கள்
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 1,514 வாக்குச்சாவடிகளில் வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி சேலம் மாநகராட்சிக்கு 60 மண்டல அலுவலர்களும், 6 நகராட்சிகளுக்கு 21 மண்டல அலுவலர்களும், 31 பேரூராட்சிகளுக்கு 42 மண்டல அலுவலர்களும் என மொத்தம் 123 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்மேகம் தலைமை தாங்கினார். மண்டல அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
அடிப்படை வசதிகள்
ெதாடர்ந்து கலெக்டர் கார்மேகம் பேசும் போது, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து வழங்கப்படும் வாக்குப்பதிவிற்கு தேவையான வாக்குச்சாவடி பொருட்களை முறையாக வாக்குப்பதிவு மையங்களில் ஒப்படைக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களை சீல் வைத்து வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு முறையாக கொண்டு செல்ல வேண்டும். வாக்குச்சாவடிகளில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் உதவி கலெக்டர்கள் வேடியப்பன் (சேலம்), சரண்யா (ஆத்தூர்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கீதாபிரியா, சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story