வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு


வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 16 Feb 2022 2:07 AM IST (Updated: 16 Feb 2022 2:07 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி மாநகராட்சி தேர்தலையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி மாநகராட்சி தேர்தலையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 
போலீஸ் பாதுகாப்பு 
சிவகாசி மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியானது. மொத்தம் உள்ள 48 வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைகள் சார்பில் 268 பேர் போட்டியிடுகிறார்கள். 
வாக்கு பதிவுக்கு தேவையான சின்னத்துடன் கூடிய வேட்பாளர் பட்டி யல் தயாரிக்கப்பட்டு வாக்குஎந்திரத்தில் பொருத்தப்பட்டு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் மாநகராட்சி அலுவலகத்தில் பூட்டிய அறையில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. 
அதிகாரிகள் ஆய்வு 
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 111 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 49 மையங்களில் ஆண்கள் மட்டும் வாக்களிக்கவும், 49 மையங்களில் பெண்கள் மட்டும் வாக்களிக்கவும், 13 மையங்களில் ஆண், பெண் என இருவரும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இந்த வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக பிரித்து தயார் நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள சிவகாசி அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரியில் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடை பெற்றது. இந்த நிலையில் ஓட்டு எண்ணும் மையத்தை சிவகாசி மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
அப்போது தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள விதிகளின் படி வாக்கு எண்ணிக்கையை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது துணை தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் உடனிருந்தனர். 

Next Story