காதலிக்கு வேறொருவருடன் திருமண நிச்சயதார்த்தம்: காதலர் தினத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


காதலிக்கு வேறொருவருடன் திருமண நிச்சயதார்த்தம்: காதலர் தினத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 Feb 2022 2:17 AM IST (Updated: 16 Feb 2022 2:17 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா அருகே காதலிக்கு வேறொருவருடன் திருமண நிச்சயார்த்தம் ஆனதால் மனமுடைந்த வாலிபர், காதலர் தினத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

சிவமொக்கா:சிவமொக்கா அருகே காதலிக்கு வேறொருவருடன் திருமண நிச்சயார்த்தம் ஆனதால் மனமுடைந்த வாலிபர், காதலர் தினத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

காதலிக்கு வேறொருவருடன் நிச்சயம்

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா ரிப்பன்பேட்டை அருகே ஆலுகுட்டே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் அவினாஷ்(வயது 27). இவரும், அதேபகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் உயிருக்கு, உயிராக காதலித்தனர். 

இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. ஆனால் காதலுக்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள், பெண்ணை வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்க வரன் பார்த்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரன் பார்த்து பெண்ணுக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த காதலன் அவினாஷ் மனமுடைந்து காணப்பட்டார். 

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் காதலர் தினமான நேற்றுமுன்தினம் தோட்டத்தில் இருந்த மோட்டார் அறைக்கு சென்று அவினாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த ரிப்பன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். 

பின்னர் தற்கொலை செய்த அவினாசின் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், காதலிக்கு வேறோரு வாலிபருடன் திருமணம் நிச்சயம் ஆனதால் மனமுடைந்து அவினாஷ் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ரிப்பன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story