கணவன்-மனைவியிடம் தகராறு; அனிதாவின் அண்ணன் கைது
கணவன்-மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக அனிதாவின் அண்ணன் கைது செய்யப்பட்டார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் பெரியார் நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி வசந்தி(வயது 39). அதே பகுதியை சேர்ந்த சண்முகத்தின் மகன் அருண்குமார்(26). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ‘நீட்’ தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் அண்ணன் ஆவார். சம்பவத்தன்று அந்த தெருவில் வசந்தி நின்று கொண்டிருந்தபோது அருண்குமார் தனது மோட்டார் சைக்கிளில் அடிக்கடி வேகமாகவும், தாறுமாறாகவும் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வசந்தி தனது கணவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர், அருண்குமாரை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது கணவன்-மனைவி இருவரையும் அருண்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இதுகுறித்து வசந்தி கொடுத்த புகாரின்பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் செந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்ராஜ் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
‘நீட்’ தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் அண்ணனான அருண்குமார் கைது செய்யப்பட்ட சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Related Tags :
Next Story