தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
வாக்காளர் விழிப்புணர்வு
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஓட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்த, ‘எனது வாக்கு எனது எதிர்காலம். ஒரு வாக்கின் வலிமை’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி தொடங்கப்பட்டது.
‘இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்க முறையான அறிவூட்டல்' (ஸ்வீப்) என்ற திட்டத்தின் மூலம், மக்களின் திறமை, படைப்பாற்றலை இந்த போட்டியில் பங்கேற்க செய்வதன் மூலம் மக்களாட்சியின் முக்கியத்துவம் பறைசாற்றுகிறது. போட்டியில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.
ரொக்கப்பரிசு
‘எனது வாக்கு எனது எதிர்காலம். ஒரு வாக்கின் வலிமை' என்ற மைய கருத்தில் தேசிய அளவில் வினாடிவினா, வாசகம் எழுதும் போட்டி, பாட்டு போட்டி, காணொலி காட்சி உருவாக்கும் போட்டி, விளம்பர வடிவமைப்பு போட்டி என 5 போட்டிகள் நடத்தப்படுகிறது. நிறுவனம் சார்ந்த நபர்களுக்கான போட்டியாக, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அமைப்புகள், தொழில் சார்ந்தவர், தொழில் சாராதவர்கள் என்ற வகையில் வருவாய் ஈட்டக்கூடியவர்கள் உரிய சான்றுடன் பங்கேற்கலாம்.
ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான ரொக்கப்பரிசுகள் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கும், சிறப்பு பரிசு பெறுபவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த போட்டி குறித்த விவரங்களை https://ecisveep.nic.in/contest என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது விவரங்களை voter-contest@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற மார்ச் மாதம் 15-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story