ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பா.ஜ.க.வின் பார்வை இந்தியாவை சிதற வைத்துவிடும்- பவானியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பா.ஜ.க.வின் பார்வை இந்தியாவை சிதற வைத்துவிடும் என்று பவானியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
பவானி
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பா.ஜ.க.வின் பார்வை இந்தியாவை சிதற வைத்துவிடும் என்று பவானியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
தகுதி இல்லை
பவானியில் நகர் மன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.வை கார்ப்பரேட் கட்சி என்று விமர்சனம் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே இல்லை. 10 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் இல்லாத போது ஒவ்வொரு தொண்டர்களின் எழுச்சியோடு கழகப் பணி செய்துதான் இன்று சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்தில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. நகராட்சி மற்றும் மாநகராட்சி, பேரூராட்சி தேர்தல்களிலும் பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணி பெறும்.
மாநிலத்தின் உரிமை
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் நீட் தேர்வுக்கு மறுசீராய்வு கொண்டுவரப்பட்டது என மத்திய அரசு தெரிவிப்பது தவறான கருத்து. காங்கிரஸ் நீட் கொண்டு வந்தது. ஆனால் அந்த தேர்வை ஏற்பதும், ஏற்காமல் இருப்பதும் அந்தந்த மாநிலத்தின் உரிமை என அறிவித்தது.
ஆனால் பாரதீய ஜனதா அரசு நீட் தேர்வை கட்டாயமாக்கியது. இது குறித்து கருத்துச் சொல்வதற்கு கூட மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கவில்லை.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம் என்ற பாரதீய ஜனதாவின் பார்வை சோவியத் யூனியன் சிதறுண்டது போல இந்தியாவையும் சிதற வைத்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story