மனைவி இறந்த துக்கம் தாங்காமல் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த தொழிலாளி உயிருடன் மீட்பு
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் ஆற்றில் குதித்த தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டார்.
பவானி
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் ஆற்றில் குதித்த தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டார்.
பாலத்தில் இருந்து குதித்தார்
ஈரோடு மாவட்டம் பவானி புதிய பஸ்நிலையம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தையும், நாமக்கல் மாவட்டத்தையும் இணைக்கும் அந்த பாலத்தில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் ஒருவர் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அவர் திடீரென தடுப்பு சுவரில் ஏறி நின்று ஆற்றில் குதித்து விட்டார். அந்த பகுதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே பவானி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்தார்கள்.
உயிருடன் மீட்பு
பின்னர் பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் இருந்து குதித்தவரை பரிசல் மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்கள். ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்றதால் முதுகு பகுதியில் மட்டும் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.
அதன்பின்னர் அவர் ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆற்றில் அவர் குதித்த இடம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ்நிலைய எல்லைக்குள் வருவதால் இதுபற்றி குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
மனைவி இறந்த வேதனை
போலீஸ் விசாரணையில், அவர் ஈரோடு அருகே உள்ள சித்தோடு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த தொழிலாளி கோபால் (வயது 56) என்பது தெரியவந்தது. கோபாலின் மனைவி தனலட்சுமி (50). உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனால் துக்கம் தாங்காமல் மனவேதனையில் இருந்த கோபால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து ஆற்றில் குதித்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story