1,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


1,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 16 Feb 2022 3:43 AM IST (Updated: 16 Feb 2022 3:43 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு கடத்த முயன்ற1,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நாகர்கோவில்:
கேரளாவுக்கு கடத்த முயன்ற1,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
குமரி மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி பகுதியில் ரோந்து சென்றனர். அவர்கள் கோவளம் பகுதியில் சென்றபோது, சாலையோரம்  முட்புதர்களுக்கு இடையே தார்ப்பாயால் மூடப்பட்டு இருந்தது. இதனால், சந்தேகமடைந்த போலீசார், அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, சிறு, சிறு மூடைகளில் 1,600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், கேரளாவுக்கு கடத்துவதற்காக அங்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசியை கடத்த முயன்ற நபர்களை தேடி வருகிறார்கள்.

Next Story