குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர


குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர
x
தினத்தந்தி 16 Feb 2022 5:19 PM IST (Updated: 16 Feb 2022 5:19 PM IST)
t-max-icont-min-icon

குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர

நாய்கள் தொந்தரவு அதிகரிப்பு
தாராபுரம் அருகே உள்ள அலங்கியத்தில் கொசு தொல்லை ஒரு புறம் இருந்தாலும் தற்போது நாய்களின் தொந்தரவு அதிகமாக உள்ளது. இதனால் பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் தனியாக செல்ல அச்சப்படுகிறார்கள். வாகனங்களில் செல்வோரையும் துரத்தி சென்று கடிக்கிறது. சில நேரங்களில் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகிறது.  இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சின்னபள்ளிவாசல் அருகில் ஒருவரை நாய் கடித்து விட்டது. எனவே பொதுமக்களின் நலன் கருதி தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்டுத்த வேண்டும் என்று ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ஏ.ஷாகுல் ஹமீது, அலங்கியம்
குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர் 
திருப்பூர் பல வஞ்சிபாளையம் காளி குமாரசாமி கோவில் அருகில் உள்ள சீனிவாசா நகரில் பல மாதங்களாக தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த சாக்கடைநீரை அப்புறபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர். 

Next Story