பின்னலாடையின் பெருமையை விளக்கும் ஓவியங்கள்
பின்னலாடையின் பெருமையை விளக்கும் ஓவியங்கள்
திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி மாணவர்கள், பழைய பஸ் நிலையத்தின் முகப்பு சுவரில் ஓவியம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 மாணவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து கிராப்டி முறையில் ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டாலர் சிட்டியான திருப்பூரின் பெருமையை பறைசாற்றும் வகையில் பின்னலாடை தொழிலை அடிப்படையாக கொண்டு நூல், ஊசி, டாலர், ஆடைகள் உள்ளிட்டவற்றை ஓவியமாக கொண்டு வர்ணம் பூசியுள்ளனர். 14 வகையான வர்ணத்தை கொண்டு ஓவியங்களை அழகுற வரைந்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story