குப்பைக்கு தீ வைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி
குப்பைக்கு தீ வைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி
மடத்துக்குளம் அருகே ஜோத்தம்பட்டி ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வெளியேற்றப்படும் குப்பைகளும், 100 க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் பல இடங்களில் குவிந்து கிடக்கிறது. இவற்றை அப்புறப்படுத்தாமல் தீ வைத்து எரிக்கப்படுகிறது. கணியூர் பஸ் நிறுத்தத்திலிருந்து புதூர்மடம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் பல இடங்களில் தேங்கிக் கிடந்த குப்பைகள், தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறிய தோடு, ரோடுகளில் புகை சூழ்ந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது ஜோதி கோவில் தொடங்கி புதூர் மடம் வரை ரோட்டின் ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தாமல் தீ வைப்பதால் பெட்ரோல் கசிவு உள்ள வா கனங்களில் தீப் பிடிக்கும் அபாயம் உள்ளது. இதனால் பெரிய விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதுபோல் குப்பைகளை எரிப்பதால் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக குப்பைகளை முறை யாக அப்புறப்படுத்த வேண்டும். தீ வைக்க கூடாது என்றனர்.
Related Tags :
Next Story