வல்லப பெருமாள்கோவில் கும்பாபிஷேகம்
ஆண்டிப்பட்டி அருகே வல்லப பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே சித்தையகவுண்டன்பட்டி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான வல்லப பெருமாள்கோவில் உள்ளது. 2 மூலவர்கள், 2 கருவறைகளுடன் கூடிய இந்தகோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது.
இதையொட்டி மாலை 6 மணிக்கு அனுக்கிரக மற்றும் விக்னேஷ்வர பூஜை நடைபெற்றது. அதன்பிறகு இரவில் தீபாராதனை முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது.
நேற்று அதிகாலை 4 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து கணபதி ஹோமம் முடிக்கப்பட்டு, கடம் புறப்பாடு தொடங்கி பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதன்பிறகு மூலவர்கள் விநாயகர் மற்றும் ஸ்ரீதேவி-பூதேவி சமேத வல்லப பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. விழாவில் தேனி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story