கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.5 ஆயிரம்- செல்போன் வழிப்பறி
கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.5 ஆயிரம், செல்போனை வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாகூர்:-
கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.5 ஆயிரம், செல்போனை வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கூட்டுறவு சங்க செயலாளர்
நாகை சிவன் மேல வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது55). இவர் நாகூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள பாலையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் நாகூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின்தொடர்ந்து சென்று வழிமறித்தனர். பின்னர் அவரிடம் இருந்த செல்போன், ரூ.5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து சந்திரசேகரன் நாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கண்காணிப்பு கேமரா
அதன்பேரில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகை வெளிப்பாளையம் வ.உ.சி. தெருவை சேர்ந்த முனியாண்டி மகன் கார்த்திகேயன் (28) உள்பட 2 பேர் சந்திரசேகரனிடம் பணம் மற்றும் செல்போனை வழிப்பறி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story