வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
ஊட்டி பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
ஊட்டி
ஊட்டி பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
தேர்தல் பார்வையாளர் ஆய்வு
நீலகிரி மாவட்ட தேர்தல் பார்வையாளர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் ஊட்டி நகராட்சியில் வாக்கும் எண்ணும் மையமான ரெக்ஸ் மேல்நிலை பள்ளியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கு வாக்குப்பதிவுக்கு பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வந்து வைக்கப்படும் பாதுகாப்பு அறைகள் தயார் செய்யப்பட்டு உள்ளதா, எந்திரங்கள் அடுக்கி வைக்க தரையில் எண்கள் குறிக்கப் பட்டு இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் 29 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி 2 டி.வி. மூலம் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார்.
தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோர் வந்து செல்லும் வழி, முகவர்கள் வரும் வழி தனித்தனியாக இருக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கேத்தி பேரூராட்சி
ஆய்வின் போது ஊட்டி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆணையாளர் காந்திராஜ் உடனிருந்தார். தொடர்ந்து கேத்தி பேரூராட்சியில் வாக்கும் எண்ணும் மையமான சி.எஸ்.ஐ. மேல்நிலை பள்ளியில் தேர்தல் பார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கு நடந்து வரும் பணிகள் மற்றும் தயாராக உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story