தூத்துக்குடியில் தபால் வாக்குகளை பதிவு செய்த போலீசார்
தூத்துக்குடி மாநகராட்சியில் தபால் வாக்குகளை அதிக அளவில் போலீசார் பதிவு செய்துள்ளனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் நாளை மறுநாள்(சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தபால் வாக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தபால் வாக்குகளை செலுத்த வசதியாக மாநகராட்சியில் தபால் வாக்கு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் முதல் இந்த தபால் வாக்குபெட்டியில் அரசு ஊழியர்கள், போலீசார் தபால் வாக்குளை செலுத்தி வருகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் நேற்று அதிக அளவில் தபால் வாக்குகள் செலுத்தினர். தபால் வாக்குகளை வாக்கு எண்ணிக்கை நாளான 22-ந் தேதி காலை 7 மணி வரையில் செலுத்தலாம். பின்னர் வாக்கு எண்ணிக்கையின் போது தபால் வாக்குகள் சேர்த்து எண்ணப்படுகின்றன.
Related Tags :
Next Story