திரவுபதி அம்மன் கோவில் தேர்த்திருவிழா: பக்தர்கள் மீது நடந்து சென்று பூசாரி அருள்வாக்கு
திரவுபதி அம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி பக்தர்கள் மீது நடந்து சென்று பூசாரி அருள்வாக்கு கூறினார்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் ஒன்றியம் ஆவத்துவாடியில் திரவுபதி அம்மன், செல்லியம்மன், காளியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. மேலும் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் மீது பூசாரி நடந்து சென்று அருள்வாக்கு கூறும் நிகழ்வு நடந்தது. அப்போது திருமணம் நடக்க வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் ஆண், பெண் பக்தர்கள் தரையில் படுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். தலையில் பூங்கரகம் சுமந்தபடி பூசாரி, அவர்கள் மீது நடந்து சென்று அருள்வாக்கு கூறினார். விழாவில் ஆவத்துவாடி, சுண்டகாப்பட்டி, மோட்டூர் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story