வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 80 வகை பொருட்களை பிரித்து தயார் செய்யும் பணி தீவிரம்
வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 80 வகை பொருட்களை பிரித்து தயார் செய்யும் பணி தீவிரம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 5 பேருராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்காக 46 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்காக 46 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கூடுதலாக 10 எந்திரங்கள் என மொத்தம் 56 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான அழியாத மை, பேனா, பென்சில், படிவங்கள், சீல், அரக்கு உள்ளிட்ட 80 வகையான தளவாட பொருட்களை வாக்குச்சாவடி வாரியாக பிரித்து சாக்குப்பையில் கட்டி தயார்செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதை நகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான குமரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி தேர்தல் உதவியாளர் தாமரைச்செல்வன் மற்றும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் இருந்தனர்.
Related Tags :
Next Story