கள்ளக்குறிச்சி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ 41 லட்சத்துக்கு பருத்தி விற்பனை


கள்ளக்குறிச்சி  கூட்டுறவு விற்பனை சங்கத்தில்  ரூ 41 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
x
தினத்தந்தி 16 Feb 2022 10:58 PM IST (Updated: 16 Feb 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ 41 லட்சத்துக்கு பருத்தி விற்பனை


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி சந்தை நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 380 விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி கொட்டு ரகம் 550 மூட்டைகள், எல்.ஆர்.ஏ. ரகம் 970 மூட்டைகள் என மொத்தம் 1,520 மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

இதில் திருப்பூர், விழுப்புரம், பண்ருட்டி கும்பகோணம், சங்ககிரி, ஆத்தூர், கொங்கணாபுரம், புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தி மூட்டைகளை ஏலம் பிடித்து வாங்கி சென்றனர். இதில் எல்.ஆர்.ஏ. ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 500-க்கும், குறைந்த பட்சமாக ரூ.8,289-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.6,800-க்கும், குறைந்தபட்சமாக ரூ.3,099-க்கும் ஏலம் போனது. ஆக மொத்தம் ரூ.41 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனையானது. இத்தகவலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் சஞ்சீவி தெரிவித்தார்.


Next Story