மின்னணு எந்திரங்கள் வைக்க வரிசை எண் எழுதும் பணி
வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு எந்திரங்கள் வைக்க வரிசை எண் எழுதும் பணிகள் நடைபெற்று வருகிறது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இதில் விழுப்புரம் நகராட்சிக்கு விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள இ.எஸ். கலை அறிவியல் கல்லூரியும், திண்டிவனம் நகராட்சிக்கு திண்டிவனம் புனித அன்னாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், கோட்டக்குப்பம் நகராட்சிக்கு கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை புயல் பாதுகாப்பு மைய கட்டிடமும், அனந்தபுரம் பேரூராட்சிக்கு செஞ்சி ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் தளமும், அரகண்டநல்லூர் பேரூராட்சிக்கு டி.தேவனூர் ஸ்ரீலட்சுமி வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியும், செஞ்சி பேரூராட்சிக்கு செஞ்சி ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தரைத்தளமும், மரக்காணம் பேரூராட்சிக்கு மரக்காணம் மேலவீதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியும், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்கு திருவெண்ணெய்நல்லூர் காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளியும், வளவனூர் பேரூராட்சிக்கு வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு விக்கிரவாண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் வாக்கு எண்ணும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த வாக்கு எண்ணும் மையங்களை மாநில தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து வாக்கு எண்ணுவதற்கு ஏற்ப மையங்களை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
தேர்தலில் பதிவாகும் வாக்குப் பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு வந்து வைப்பதற்கு ஏற்றாற்போல் வாக்கு எண்ணும் மையங்களின் அறைகளில் வரிசை எண்கள் எழுதப்பட்டு வருகிறது. மேலும் வாக்கு எண்ணும் பணிக்கான மையங்களில் வேட்பாளர்கள், முகவர்கள் அமருவதற்கான வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story