பாம்பன் குருசடை தீவு சுற்றுலா படகு போக்குவரத்தை தொடங்க வனத்துறை முடிவு


பாம்பன் குருசடை தீவு சுற்றுலா படகு போக்குவரத்தை தொடங்க வனத்துறை முடிவு
x
தினத்தந்தி 16 Feb 2022 11:26 PM IST (Updated: 16 Feb 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

கிடப்பில் போடப்பட்டுள்ள குருசடை தீவு சுற்றுலா படகு போக்குவரத்து திட்டத்தை தொடங்க வனத்துறை முடிவு செய்துள்ளது. படகு நிறுத்தும் தளம் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ராமேசுவரம், 
 கிடப்பில் போடப்பட்டுள்ள குருசடை தீவு சுற்றுலா படகு போக்குவரத்து திட்டத்தை தொடங்க வனத்துறை முடிவு செய்துள்ளது. படகு நிறுத்தும் தளம் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
குருசடை தீவு
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால்முதல் தூத் துக்குடி வரையிலான இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதியில் டால்பின், கடல் பசு, ஆமை, பவளப்பாறைகள் உள்ளிட்ட 3,600 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. 
அதிலும் குறிப்பாக பாம்பன் அருகே உள்ள குருசடை தீவு கடல் பகுதியை சுற்றி அதிகமான பவளப்பாறைகள் உள்ளதுடன் ஏராளமான டால்பின்களும் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. 
ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர் களும் தீவுப் பகுதிகளை சுற்றி பார்ப்பதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட வனத்துறையின் சார்பில் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடை தீவு வரையிலும் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்று வரும் வகையில் வனத்துறை மூலம் சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டது. அதற்காக புதுச்சேரியில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பில் 4 புதிய பைபர் படகுகள் வாங்கி குருசடை தீவு கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கப் பட்டுள்ளன. 
நிறுத்தம்
ஆனால் தீவுப் பகுதிகளை சுற்றியுள்ள கடல் பகுதி மற்றும் தீவுக்கு படகு போக்குவரத்து தொடங்குவதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த படகு போக்குவரத்து திட்டமானது தற்காலிகமாக கைவிடப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 
படகுப் போக்குவரத்து தொடங்குவதற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே குந்துகால் கடற்கரையில் அமைக்கப் பட்டு இருந்த பனை மரத்தால் ஆன படகு நிறுத்தம் தளமானது பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் கொந்த ளிப்பால் கடலில் மூழ்கி சேதமானது.
நடவடிக்கை
இந்தநிலையில் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடை தீவு வரையிலும் சுற்றுலா படகு போக்குவரத்தை தொடங்குவதற்கு மாவட்ட வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 
அதற்காக குந்துகால் கடற்கரையில் படகுகளை நிறுத்தி சுற்றுலா பயணிகள் படகுகளில் ஏறி இறங்க வசதியாக கடற்கரையில் இருந்து கடலில் சுமார் 90 அடி நீளத்திலும், 6 அடி உயரத்திலும் பனை மரத்தால் ஆன படகு நிறுத்தும் தளமானது புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியானது இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும் என்று கூறப்படுகிறது. 
குருசடை தீவு பகுதியில் சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மீனவர்களிடம் எந்த ஒரு கருத்தும் ஆலோசனையும் கேட்காமல் வனத்துறையினர் குருசடை தீவு பகுதிக்கு சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகளை மீண்டும் ஈடுபட்டு வருவது மீனவர்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
கோரிக்கை
எனவே இந்ததிட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகள் மீனவர்களை அழைத்து இந்த திட்டத்தின் நன்மைகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்து மீனவர்களின் முழு ஒத்து ழைப்புடன் குருசடை தீவு பகுதிக்கு சுற்றுலா படகு போக்கு வரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரின் கோரிக்கை மற்றும் விருப்பமாகும்.

Next Story