வாஞ்சிநாதர் கோவில் மாசிமக தேரோட்டம்


வாஞ்சிநாதர் கோவில் மாசிமக தேரோட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2022 11:28 PM IST (Updated: 16 Feb 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் மாசிமக தேரோட்டம் நடைபெற்றது.

நன்னிலம்;
நன்னிலம் அருகே திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் மாசிமக தேரோட்டம் நடைபெற்றது. 
வாஞ்சிநாதர் கோவில்
நன்னிலம் அருகே உள்ள திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்தியாவிலேயே இந்த கோவிலில் எமனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி மக பெருவிழா கடந்த ஒரு வாரத்துக்கு முன் தொடங்கியது. மாசி மக திருவிழாவின் 9-வது நாளான நேற்று வாஞ்சிநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. 
தேரோட்டம்
இதையொட்டி வாஞ்சிநாதர், மங்களாம்பிகை, சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து வாஞ்சிநாதர் மங்களாம்பிகை சுவாமி பிரகாரம் வலம் வந்து அலங்கரிக்கப்பட்ட கட்டு தேரில் எழுந்தருள செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் தேரோட்டம் நடந்தது. தேர் நகரின் 4 முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஆறுமுகம் செய்திருந்தார்.

Next Story