விவசாயிகள் சாலை மறியல்


விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Feb 2022 11:39 PM IST (Updated: 16 Feb 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

நெல் கொள்முதல் பணிகளை துரிதப்படுத்தக்கோரி திருமக்கோட்டை அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திருமக்கோட்டை ;
நெல் கொள்முதல் பணிகளை துரிதப்படுத்தக்கோரி திருமக்கோட்டை அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். 
நெல் கொள்முதல்
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள பாளையக்கோட்டையில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள திடலில் நெல்லை கொட்டி வைத்து இரவு- பகலாக காவல் காத்து வந்தனர். எனவே நெல்லை விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் சமீபத்தில் பெய்த மழையால் நெல்மணிகள் முளைக்க தொடங்கிவிட்டது. 
800 மூட்டைகள்
இந்நிலையில் நெல் மூட்டைகள் குறைந்த அளவே கொள்முதல் செய்வதாகவும் நெல் கொள்முதல் பணிகளை துரிதப்படுத்தக்கோரியும் கோட்டூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பரந்தாமன் தலைமையில் சாலை மறியல் நடந்தது. இது குறித்து தகவலறிந்த நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் மற்றும் திருமக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று   சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் தினமும்  800  நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது.

Next Story