வாக்குச்சாவடி மையங்களில் ஆணையர் ஆய்வு


வாக்குச்சாவடி மையங்களில் ஆணையர் ஆய்வு
x
தினத்தந்தி 16 Feb 2022 11:43 PM IST (Updated: 16 Feb 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடி மையங்களில் ஆணையர் ஆய்வு

கூத்தாநல்லூர்;
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19- ந்தேதி நடைபெறுகிறது. கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் 109 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். தேர்தலையொட்டி கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் அமைக்கப்பட்ட வாக்கு சாவடி மையங்களில் நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிருஷ்ணவேணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் முறையாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில்  வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவது, வாக்கு பெட்டிகள் அமைக்கப்படுவது மற்றும் தபால் வாக்கு பெட்டி அமைப்பது, வாக்காளர்கள் வசதியாக வாக்களிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து நகராட்சி ஆணையர் கூறுகையில், கூத்தாநல்லூர் நகராட்சியில் தேர்தல் அமைதியாக நடைபெற போதிய  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  மேலும் வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story