உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் கொன்றேன்; தாயின் கள்ளக்காதலன் வாக்குமூலம்


உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் கொன்றேன்; தாயின் கள்ளக்காதலன் வாக்குமூலம்
x
தினத்தந்தி 16 Feb 2022 11:56 PM IST (Updated: 16 Feb 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் சிறுவனை அடித்து கொன்றதாக கைதான தாயின் கள்ளக்காதலன் தெரிவித்துள்ளார்.

தூசி

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் சிறுவனை அடித்து கொன்றதாக கைதான தாயின் கள்ளக்காதலன் தெரிவித்துள்ளார்.

சிறுவன் அடித்துக்கொலை

கடலூர் மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி நர்மதா (வயது 26). இவரது மகன்கள் நித்திஷ் (6), சித்தார்த் (4). நர்மதாவின் கணவர் சசிகுமார் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

அதைத்தொடர்ந்து நர்மதா மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது பண்ருட்டி பகுதியை சேர்ந்த தனியார் வங்கியில் நிதி வசூல் செய்யும் வினோத்குமார் (30) என்பவருடன் நர்மதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள மாங்கால் கூட்ரோடு சூ கம்பெனியில் நர்மதா வேலைக்கு சேர்ந்தார். 

இதனால் இருவரும், மகன்களுடன் ஆக்கூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். வினோத் குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நர்மதா வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் வீட்டில் இருந்து அவரது மகன் சித்தார்த்தை, நர்மதாவின் கள்ளக்காதலன் வினோத்குமார் சுவற்றில் அடித்து கொலை செய்தார். 
இதுகுறித்து தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப் பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தார்.

உல்லாசத்துக்கு இடையூறு

வினோத்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-
நமது உல்லாசத்துக்கு இடையூறாக இருக்கும் உனது இரண்டு மகன்களையும் எங்கேயாவது கொண்டு போய் விட்டுவிடு என்று நர்மதாவிடம் வினோத் குமார் கூறியுள்ளார். 

ஆனால் அதற்கு நர்மதா மறுத்துவிட்டார். வேறு எங்காவது கொண்டுபோய் விடவில்லை என்றால் உனது இரண்டு மகன்களையும் நானே  கொன்று விடுவேன் என்று கூறியுள்ளார். அவரை நர்மதா சமாதானம் செய்து உள்ளார்.

இந்த நிலையில் நர்மதா வேலைக்கு சென்றபோது சித்தார்த்தை சுவற்றில் அடித்து கொலை செய்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட வினோத்குமாரை செய்யார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Next Story