தொடர் உண்ணாவிரத போராட்டம்


தொடர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2022 11:59 PM IST (Updated: 16 Feb 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்ததை கண்டித்து குத்தாலம் அருகே பொது மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குத்தாலம்:
நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்ததை கண்டித்து குத்தாலம் அருகே பொது மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்முதல் நிலையம் இடமாற்றம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கடலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட திருவேள்விக்குடி கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது. இந்தநிலையில் திருவேள்விக்குடி கிராமத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் கிராம விளையாட்டு மைதானத்தில் இந்த ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்காக அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திடீரென்று புதிய இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட தொடங்கியது.
உண்ணாவிரத போராட்டம்
ஏற்கனவே இயங்கி வந்த பழைய இடத்தில் 100-க்கணக்கான நெல் மூட்டைகளுடன் காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதிக தூரத்தில் உள்ளதால் தங்களுக்கு மூட்டைகளை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படும் என்றும், கூடுதல் செலவு ஆகும் என்றும் கூறி, கடந்த 15 ஆண்டுகளாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்த இடத்தில் நேற்று முதல் நெல் மூட்டைகளுடன் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
பழைய இடத்தில் மீண்டும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story