ஜோலார்பேட்டை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ஜோலார்பேட்டை அருகே  வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 17 Feb 2022 12:13 AM IST (Updated: 17 Feb 2022 12:13 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியில் வசிக்கும் அருள்மொழி (வயது 42), மோகன் (45) ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள வீடுகளில் 3½ டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் குற்றவியல் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் ஆகியோர் சென்று சோதனை செய்தனர். 

அப்போது பள்ளி மாணவன் ஒருவன் ரேஷன் அரிசி எடுத்து செல்வதை பார்த்து சந்தேகமடைந்த குடிமைப்பொருள் குற்றவியல் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் அவனை பின்தொடர்ந்து சென்று பிடித்து விசாரித்தனர். அப்போது அருள்மொழி வீட்டில் 3½ டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்து அருள் மொழி மற்றும் மோகனை கைது செய்தனர். 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் எடை கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story