இன்று நடக்கஇருந்த 10-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு ஆங்கில வினாத்தாள் வாட்ஸ்-அப்பில் பரவியது


இன்று நடக்கஇருந்த 10-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு ஆங்கில வினாத்தாள் வாட்ஸ்-அப்பில் பரவியது
x
தினத்தந்தி 17 Feb 2022 12:14 AM IST (Updated: 17 Feb 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

இன்று நடக்கஇருந்த 10-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு ஆங்கில வினாத்தாள் வாட்ஸ்-அப்பில் பரவியது.

வேலூர்

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு கடந்த 9-ந் தேதி முதல் நடந்து வருகிறது. பள்ளி கல்வித்துறை சார்பில் ஒரேமாதியான வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் வந்தவாசியில் உள்ள தனியார் பள்ளிகளில் இருந்து திருப்புதல் தேர்வு இயற்பியல், பொருளியல் உள்ளிட்ட சில வினாத்தாள் தேர்வுக்கு முன்கூட்டியே வெளியான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

 அதேபோன்று இன்று (வியாழக்கிழமை) நடைபெறுவதாக இருந்த 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு வினாத்தாளும் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் முன்கூட்டியே வெளியான ஆங்கில தேர்வு வினாத்தாள் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு வாட்ஸ்-அப் குரூப்பில் வேகமாக பரவியது. பல மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தேர்விற்கு தயாரானார்கள். இதனை கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு இல்லை. தேர்வு நடைபெறும் நேரத்திற்கு முன்புதான் வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பிறமாவட்டத்தில் இருந்து முன்கூட்டியே வெளியான வினாத்தாள் சமூக வலைதளங்கள் மூலம் இங்கு பரவி இருக்கலாம் என்று தெரிவித்தார்.

Next Story