திருமணமான 10 நாளில் தாலியை கழற்றி வைத்துவிட்டு புதுப்ெபண் ஓட்டம்


திருமணமான 10 நாளில் தாலியை கழற்றி வைத்துவிட்டு புதுப்ெபண் ஓட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2022 12:16 AM IST (Updated: 17 Feb 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அருகே திருமணமான 10 நாளில் தாலியை கழற்றி வைத்து விட்டு புதுப்பெண் வீட்டை விட்டு வெளிேயறினார். அவர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்யாறு

செய்யாறு அருகே திருமணமான 10 நாளில் தாலியை கழற்றி வைத்து விட்டு புதுப்பெண் வீட்டை விட்டு வெளிேயறினார். அவர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுப்ெபண் 

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சீம்மளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமனின் மகன் யுவராஜ் (வயது 33). இவர், ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லி தாலுகா அரண்வாயில் பகுதியைச் சேர்ந்த ஜெயராமனின் மகள் ஜெயஸ்ரீ (24) என்பவருக்கும் கடந்த 6-ந் தேதி மேல்பேட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது. 

சம்பவத்தன்று புதுமாப்பிள்ளை யுவராஜ் வேலைக்குச் சென்று விட்டார். அவர் சென்ற சில மணி நேரத்தில் யுவராஜியை இவருடைய அண்ணன் லோகநாதன் செல்போனில் தொடர்பு கொண்டு, உனது மனைவி ஜெயஸ்ரீயை காணவில்லை, எங்ேகயோ மாயமாகி விட்டார், எனத் தெரிவித்துள்ளார்.

போலீசில் புகார்

உடனே யுவராஜ் வீட்டுக்கு விரைந்து வந்தார். வீட்டில் ஜெயஸ்ரீ கடிதம் ஒன்றை எழுதி வைத்து தாலிைய வீட்டில் கழற்றி விட்டு மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். 

சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயஸ்ரீ எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story