தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஆலோசனை கூட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ந்தேதி நடக்கிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை, செய்யாறு, போளூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் முன்னிலை வகித்தார்.
வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தலைமை தாங்கி பேசுகையில், தேர்தல் பணிக்கு போலீசார் சரியான நேரத்திற்கு வர வேண்டும். தேர்தலன்று பிரச்சினை ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்காளர்களுக்கு வழங்க மதுபானம், பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தால் அதனை கண்டறிந்து பறிமுதல் செய்ய வேண்டும் என்றார்.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் என போலீசார் பலர் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 238 ஊர்க்காவல் படையினர் உள்பட 1,250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story