4 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணி


4 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 17 Feb 2022 12:29 AM IST (Updated: 17 Feb 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை டி.பி.டி.ஆர். தேசிய மேல்நிலைப்பள்ளியில் 4 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணியை மாவட்ட தேர்தல் பார்வையாளர் விஜயேந்திரபாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை டி.பி.டி.ஆர். தேசிய மேல்நிலைப்பள்ளியில் 4 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணியை மாவட்ட தேர்தல் பார்வையாளர் விஜயேந்திரபாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
60 வார்டுகளுக்கு தேர்தல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, குத்தாலம், மணல்மேடு, வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய 4 பேரூராட்சிகள் உள்ளன. 
இந்த 4 பேரூராட்சிகளில் 63 வார்டுகள் உள்ளன. அதில் தரங்கம்பாடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 3 வார்டுகளுக்கான பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 15 வார்டுகள் மற்றும் குத்தாலம், வைத்தீஸ்வரன் கோவில், மணல்மேடு ஆகிய பேரூராட்சிகளில் உள்ள தலா 15 வார்டுகள் சேர்த்து 60 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளன.
இந்த 4 பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மயிலாடுதுறை டி.பி.டி.ஆர். தேசிய மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்படும் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதனையடுத்து மயிலாடுதுறை டி.பி.டி.ஆர். தேசிய மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளரும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்குனருமான விஜயேந்திரபாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்தல் கண்காணிப்பாளர் ஆய்வு
அப்போது 4 பேரூராட்சிகளுக்கும், பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே தனித்தனியாக அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணும் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோருக்கு தேவையான வசதிகள் செய்வது குறித்தும் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் கேட்டறிருந்தார்.
அப்போது அவருடன் தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ், செயல் அலுவலர்கள் ரஞ்சித் (குத்தாலம்), கமலக்கண்ணன் (தரங்கம்பாடி), தமிழ்ச்செல்வன் (மணல்மேடு) மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.

Next Story