1,588 வீடுகள் கட்டும் பணி தொடக்கம்


1,588 வீடுகள் கட்டும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 17 Feb 2022 12:40 AM IST (Updated: 17 Feb 2022 12:40 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் 1,588 வீடுகள் கட்டும் பணி தொடக்கப்பட்டது. இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்தாா்

திருவெண்காடு:
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில்  1,588 வீடுகள் கட்டும் பணி தொடக்கப்பட்டது. இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்தாா்.
வீடுகள் கட்டும் பணி தொடக்கம்
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள 1,588 பயனாளிகளுக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஒரு பயனாளிக்கு ரூ.2.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  இந்த வீடு கட்டும் பணிகள் நேற்று ஒரே நாளில் அனைத்து ஊராட்சிகளிலும் தொடங்கப்பட்டன. திருவெண்காடு ஊராட்சியில் வீடு கட்டும் பணிகளை சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருள்மொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
விரைவில் கட்டி முடிக்க வேண்டும்
அப்போது அவர் கூறுகையில், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 37 ஊராட்சிகளில் 1,588 பயனாளிகளுக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இந்த பணிகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளன.
 இந்த பணிகளை ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் தினந்தோறும் கண்காணிப்பு செய்வா். பயனாளிகள் விரைந்து வீடுகளை கட்டி முடிக்க வேண்டும்.
 இவ்வாறு அவர் கூறினார்.
 அப்போது அவருடன் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், ஒன்றிய உதவி பொறியாளர் கலையரசன், பணி மேற்பார்வையாளர் பிருந்தா, ஊராட்சி செயலர் கார்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.  இதனை தொடர்ந்து மணி கிராமம், மங்கைமடம், திருவாலி உள்ளிட்ட  ஊராட்சிகளில்  நடைபெற்று வரும் வீடு கட்டும் பணிகளை பார்வையிட்டார்.

Next Story