வாக்காளர்களுக்கு பணம்; 2 பேர் மீது வழக்கு


வாக்காளர்களுக்கு பணம்; 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 Feb 2022 12:51 AM IST (Updated: 17 Feb 2022 12:51 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களுக்கு பணம்; 2 பேர் மீது வழக்கு

ஸ்ரீரங்கம், பிப்.17-
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட 4-வது வார்டு பகுதியில் நேற்று வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த பறக்கும்படையினர் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அ.ம.மு.க.வை சேர்ந்த சக்திவேல், சிவக்குமார் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story