பெண் இன்ஸ்பெக்டர் மீதான விசாரணை, நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு மாற்றம்


பெண் இன்ஸ்பெக்டர் மீதான விசாரணை, நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 17 Feb 2022 12:52 AM IST (Updated: 17 Feb 2022 12:52 AM IST)
t-max-icont-min-icon

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குமரி பெண் இன்ஸ்பெக்டர் மீதான வழக்கு விசாரணை, நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

நாகர்கோவில், 
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குமரி பெண் இன்ஸ்பெக்டர் மீதான வழக்கு விசாரணை, நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. 
பெண் இன்ஸ்பெக்டர்
நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சேவியர் பாண்டியன். இவர் நாகர்கோவில் கோர்ட்டில் குற்றவியல் உதவி இயக்குனராக உள்ளார். இவருடைய மனைவி கண்மணி (வயது 52), நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். கணவன், மனைவி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக புகார்கள் வந்தன. 
அதன் அடிப்படையில் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பீட்டர் பால் தலைமையில் இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் மற்றும் போலீசார் கடந்த 12-ந் தேதியன்று இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் மீனாட்சிபுரத்தில் உள்ள அவரது தோழி அமுதா ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். 
171.78 சதவீதம் அதிகரிப்பு
இதில் இன்ஸ்பெக்டர் கண்மணி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கமும், வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையில் ரூ.91 லட்சத்துக்கான ஆவணம் மற்றும் 91 பவுன் தங்க நகைகள், சில ெசாத்து பத்திரங்கள், பரிசு பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தோழி அமுதா வீட்டில் நடந்த சோதனையில் ரூ.23 லட்சத்துக்கான கடன் பத்திரங்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 
போலீசாரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்து, கடன் பத்திரங்கள், பணம் மற்றும் நகைகள் ஆகியவற்றை ஒப்பிடுகையில் பெண் இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் அவரது கணவர் சேவியர் பாண்டியன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக 171.78 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணை மாற்றம்
இதுதொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் இன்ஸ்பெக்டர் கண்மணி, கணவர் சேவியர் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 
இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை அனைத்தும் தற்போது நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இனி இந்த வழக்கு விசாரணையை நெல்ைல மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு எஸ்கால் தலைமையிலான போலீசார் நடத்துவார்கள்.

Next Story