அபராத ரட்சகர் கோவில் தேரோட்டம்
அபராத ரட்சகர் கோவில் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சுக்ரிவன் ஆடுதுறை கிராமத்தில் உள்ள ஏலவார் குழலி அம்மன் உடனுறை குற்றம் பொறுத்தீஸ்வரர் (அபராத ரட்சகர்) கோவிலில் மாசிமக தேரோட்டம் நடைபெற்றது.
இதனையொட்டி காலை பஞ்ச மூர்த்திகளுக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், மேள தாளங்கள் முழங்க சுவாமி தேருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பூஜைகள் நடைபெற்றதும் நாதஸ்வர இசை, மேளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் கிராம முக்கியஸ்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து தேரோடும் நான்கு வீதிகள் வழியாக தேரை பக்தர்கள் இழுத்து வந்தனர். விழாவில் ஆடுதுறை, ஒகளூர், பென்னக்கோணம், அத்தியூர் கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து இருந்தனர்..
Related Tags :
Next Story