கஞ்சா விற்ற ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது
கஞ்சா விற்ற ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையில் போலீசார் வி.கைகாட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வி.கைகாட்டி பஸ் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த ஒரு ஆட்டோவை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த ஆட்டோவில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி ஆட்டோ டிரைவர் பாலமுருகன் (வயது 21) மற்றும் அவரது நண்பர் சுண்டக்குடி வடக்கு தெருவை சேர்ந்த முருகராஜ் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story