பட்டாசு வெடி விபத்து சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நல்லிவீரன்பட்டியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 34). இவர் தனது வீட்டின் 3-வது மாடியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசுகளை தயாரித்து பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் பட்டாசு வைத்திருந்த மாடியில் தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில், பிரவீனிடம் வேலை செய்து வந்த அஜித்குமார் என்ற வாலிபர் பலியானார். மேலும் பிரவீனின் வீட்டின் கீழ் பகுதியில் குடியிருந்த ஒரு பெண் மற்றும் 6 மாத பெண் குழந்தையும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனின் தாயார் காத்தம்மாள், மனைவி பூமாதேவி ஆகியோரை கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பிரவீனை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story